
சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய சிந்துஜா என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ரேவதி தண்ணீர் தொட்டியை திறந்து தண்ணீர் எடுத்து சென்றுள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிந்துஜா எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.
வீட்டிற்குள் தண்ணீர் குடத்தை வைத்துவிட்டு திரும்பி வந்த ரேவதி தனது குழந்தை தண்ணீர் தொட்டியில் கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். அந்த குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.