தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் தெக்கலூர் அருகே 3 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு கார் தீ பிடித்து எரிந்ததால் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு கார்களின் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். இவரை போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.