துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1300 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 7.8ஆக பதிவானது. 1700 கட்டடங்களுக்கு மேல் இடிந்து கிடப்பதால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில் தாமதம் நிலவுகிறது.

காலையில் 7.8 ரிக்டர் அளவுகோளில் ஒரு நிலநடுக்கமும், மாலை 4 மணியளவில் 7.6 அளவுகோளில் இரண்டாவதும் ஏற்பட்டது. இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன் 6 என்ற அளவில் ஒரு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 1800 என உயர்ந்துள்ளது.