
சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் டிங்கர் குமரன் உள்ளிட்ட அந்த இயக்கத்தின் 10 நிர்வாகிகளை பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மூன்று பெட்ரோல் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரியாரை இழிவாக பேசி வரும் சீமான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லையே, அதற்குள் குண்டு போட வருவீங்களா? பெரியாரை யாரும் இழிவாக பேசவில்லை. பெரியார் என்ன பேசினாரோ என்ன எழுதினாரோ அதைத்தான் நான் பேசினேன். இப்போ நான் பெரியாரைப் பற்றி பேசத் தொடங்கினால் நீங்க என்ன செய்வீங்க? தீக்குளித்து செத்துருவீங்களா? என்ன பண்ணுவீங்க? இதற்கெல்லாம் பயப்படுற ஆள் நான் கிடையாது. எனக்கு வேறு சில வேலைகள் உள்ளதால் இடைவெளி விட்டிருக்கிறேன். திரும்பவும் ஆரம்பித்து விடுவேன். பார்த்து அடக்கமா இருந்துக்கோங்க. தோண்டி தோண்டி எடுத்து என் முன்னாடி நிறுத்தாதீங்க என்று சீமான் பேசியுள்ளார்.