
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வி சாலையில் தற்போது தொடங்கிவிட்ட நிலையில் முதலில் கட்சி கொடியை ஏற்றிவிட்டு பின்னர் உறுதிமொழி ஏற்றுவிட்டு கொள்கைகளை அறிவித்தனர். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்காக என்ன செய்யப்படும் என்னென்ன நன்மைகள் செய்யப்படும் என்னவெல்லாம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் தலைவர் விஜய் மிகவும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பணம் யார் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.
ஆனால் தேவைக்கு அதிகமாக பணத்தை சம்பாதித்து என்ன செய்ய. நமக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்தில் மட்டும் தான் அரசியலுக்கு வந்ததாக கூறினார். அதோடு தற்போது பாம்பை கையில் பிடித்து விட்டதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு தமிழ்நாட்டில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது என்று கூறினார். இந்நிலையில் தற்போது பெரியாரின் கொள்கையை மட்டும் கையில் எடுக்கப் போவதில்லை என்று விஜய் கூறியுள்ளார். அதாவது பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகளை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவது கிடையாது எனவும் அதில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. அறிஞர் அண்ணா சொன்னது போல ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்களுடைய கோட்பாடு என்று கூறினார்.