நடிகரும் இயக்குநரும் பாடகருமான டி.ராஜேந்திரனுக்கு சிம்பு, குரலரசன் மற்றும் இலக்கியா என மூன்று பிள்ளைகள் உள்ளனர். குரலரசன், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி நபீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் குரலரசன் மற்றும் நபீலா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017ல் தனது தங்கைக்கு குழந்தை பிறந்தபொழுது சிம்பு அந்த குழந்தைக்கு மாமாவானர். தற்போது அவரின் தம்பிக்கு குழந்தை பிறந்த நிலையில் பெரியப்பா அவதாரமும் எடுத்துள்ளார். இந்நிலையில் உடன் பிறந்த இருவருக்கும் திருமணம் முடிந்து குழந்தை பிறந்துள்ள நிலையில் சிம்பு எப்பொழுது திருமணம் செய்துகொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.