பென்ஷன் வாங்கும் அனைவரும் ஆதார் எண், பெயர் மற்றும் மொபைல் எண் மற்றும் ஓய்வூதியம் செலுத்தும் ஆர்டர் நம்பர் அதாவது PPO மூலம் மட்டுமே ஆதார் அடிப்படையான அங்கீகாரத்தின் உதவியுடன் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். ஆனால் சில சமயங்களில் பென்ஷன் பேமெண்ட் ஆர்டர் நம்பரை மறந்து விடுவார்கள்.

அப்படியான நிலையில் அவர்கள் தங்கள் ஓய்வூதிய நிலையை சரி பார்ப்பதிலிருந்து வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிப்பது வரை பல சிக்கல்களை சந்திக்க வேண்டும் என்பதால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் பென்ஷன் திட்டத்தின் ஓய்வூதியதாரர் ஒரு தனித்துவமான 12 இலக்க எண்ணை பெறுகின்றார். சில நேரங்களில் பென்ஷன் வாங்குவோர் இந்த எண்ணை மறந்து விடுகின்றனர். அதனால் இந்த எண்ணை திரும்ப பெறுவது மிகவும் எளிதான ஒன்றுதான்.

முதலில் www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் செல்லவும்.

ஆன்லைன் சேவைக்குச் சென்று pensioner portal என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு அங்கு உள்ள PPO எண்ணைக் கிளிக் செய்யவும்.

பிபிஓ எண்ணை அறிய உங்கள் வங்கி கணக்கு எண் அல்லது பிஎஃப் எண்ணை உள்ளிட வேண்டும்.