நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில்  ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. முந்தைய காலக்கெடு ஜூன் 26 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தத நிலையில் தற்போது ஜூலை 11 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளதாக EPFO ​​தெரிவித்துள்ளது.

EPFO தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதிய விருப்பத்தை அதன் வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. சமீபத்திய நீட்டிப்பு மூலம், இதுவரை ஆன்லைனில் பென்ஷன் பெற விண்ணப்பிக்காதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.