ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களின் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. இப்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அரசு பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் குறித்து புது மாற்றத்தை அறிவித்து உள்ளார். முன்பாக ஓய்வூதியதாரர்கள் தற்போதுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மாற்ற கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து உள்ளனர். அதை கருத்தில் கொண்டு இனிமேல் அரசு ஓய்வூதியதாரர்கள் அவர்கள் இறுதியாக பெற்ற அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.

இந்த ஜிபிஎஸ் ஓய்வூதிய திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை 80 சதவீதம் அளவில் ஒத்திருக்கிறது. முன்பாக ஓய்வூதியமானது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 20.3% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு பணிபுரியும் ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதியதாரர்களுக்கும் 2 தவணை அகவிலைப்படியை வழங்க முடிவுசெய்துள்ளது.

இதனிடையே அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஓய்வூதியதாரர்களும் அதன் பலனை அனுபவிக்க முடியும் என அரசு அறிவித்துள்ளது. எனினும் இந்த புது ஜிபிஎஸ் திட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு அளிக்க வேண்டியது இருக்கிறது. இதன் காரணமாக மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.