இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு பெரும் லட்சியத்துடன் தொடங்கிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வெற்றி பெற்றுள்ளன.

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று மேலும் 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. காலை 10:30 மணிக்கு ஒரே நேரத்தில் 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து இந்த ஐந்து புதிய ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.