இந்தியாவில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் வருடத்திற்கு 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி தொகையை இரட்டிப்பாக்கி 12000 ரூபாயாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பெண் வாக்காளர்களை கவரும் வகையில் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.