சமீப காலமாக சவுக்கு சங்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, அவர் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பேசுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இதனுடன், “பணம் வாங்கி அரசியல் கருத்துகளை வெளியிடுகிறார்” என்ற குற்றச்சாட்டையும் சில பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து, பிரபல பத்திரிகையாளர் கரிகாலன் தன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவே தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த பதிவில் அவர், “பல்லாவரத்தில் ₹1 கோடியே 42 லட்சத்திற்கு சவுக்கின் தோழி மாலதி வீடு வாங்கியுள்ளார். கடந்த மாதம் 10ஆம் தேதி பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீட்டின் உண்மை மதிப்பு ₹3 கோடி என கூறப்படுகிறது. விஜய், எடப்பாடி, நயினார் என்று சவுக்கு காட்டில் மழை பெய்கிறது. EDக்கும் பாஜக கூட்டணிக்கும் மாமவேலை பார்க்கும் நபரை ED விசாரிக்குமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி, சவுக்கு சங்கர் மீது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சவுக்கு சங்கர் இதுவரை எந்தவித விளக்கமும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்லாவரத்தில் 1 கோடியே 42 லட்சத்துக்கு வீடு வாங்கிய சவுக்கின் தோழி மாலதி!
கடந்த மாதம் 10ம் தேதி பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மை மதிப்பு 3 கோடியாம்!
விஜய், எடப்பாடி, நயினார் என்று சவுக்கு காட்டில் மழை பெய்கிறது.
EDக்கும் பாஜக கூட்டணிக்கும் மாமவேலை பார்க்கும் நபரை ED… pic.twitter.com/zsyIUdxz3m— கரிகாலன் (@KariKalankiru) October 6, 2025
