தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கான பல சிறப்பு திட்டங்கள் நேற்று வழங்கினார். 106 குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டு 500 ரூபாய் ஒவ்வொரு மாணவினுடைய வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டு அதற்கான கணக்கு புத்தகம் குழந்தைகளின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோன்று காமராஜர் பிறந்த தினத்தன்று நடத்தப்பட்ட கல்வி வளர்ச்சி தின விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது . மேலும் தாய் தந்தையரை பறிகொடுத்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் 75 ஆயிரம் நிதி 22 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக பயனடைந்த மாணவர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தார்கள்