தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையானது அமைச்சர் முத்து சாமியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு இறக்குமதி மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது.

இந்த வரிசையில் தற்பொழுது தமிழக முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் புதிய பொலிவுடன் நவீனமயமாக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளை டிஜிட்டல் மயமாக்க ரெயில்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது தமிழக அரசு. டாஸ்மாக் கடைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு பல நாட்களாகவே உள்ளது. அதனை போக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இது வேலை பளுவை அதிகரிக்கும் என்கின்றனர் அவர்கள்.