ரேஷன் கடைகள் மூலமாக மக்கள் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகிறார்கள். ஆனால் ரேஷன் கடை திறந்து இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள பல கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டிய உள்ளது. ஒரு சில நேரம் ரேஷன் கடை திறக்காமல் இருந்தால் வெறும் கையோடு திரும்பும் நிலையும் உள்ளது. இதனை தவிர்க்க ஒரு வழி கிடைத்துவிட்டது. அதாவது ரேஷன் கடைகள் திறந்து இருக்கிறதா? என்பதை அறிய என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தமிழக அரசு ஒரு வழியை அறிவித்துள்ளது.

அதாவது தமிழக அரசு tn epds என்ற செல்போன் செயலியை  அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலமாக லாகின் செய்து ரேஷன் கடை திறந்து இருக்கிறதா? என்னென்ன பொருட்கள் இருக்கிறது/ என்பதை தெரிந்து கொள்ள முடியும். அது மட்டும் அல்லாமல் செல்போன் எண்ணின்973904050 மூலம் PDS 101 என்ற எண்ணுக்கு என்று குறுஞ்செய்தி அனுப்பும்போது உங்கள் ரேஷன் கடை திறந்து இருக்கிறதா என்பதும்,  PDS 102 அனுப்பும்போது என்னென்ன பொருட்கள் இருப்பு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இதற்கான குறுஞ்செய்தி செல்போனுக்கு அனுப்ப படும்.