
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன . பொருளாதார ரீதியாக அவர்களை ஊக்குவிக்கவும் பல சேமிப்பு திட்டங்களையும் உதவி தொகை திட்டங்களையும் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட்டின் போது பெண்களுக்காக மகிளா சம்மன் என்ற சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் இன்று ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் பல திட்டங்களை தனியாக செயல்படுத்தி வரும் நிலையில் அதில் ஒன்றுதான் கன்யா சுமங்கலா யோஜனா என்ற திட்டம். உத்திரபிரதேச மாநில அரசின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை தற்போது 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.