2015 ஆம் வருட முதல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் கடைசி நான்காவது சனிக்கிழமைகளில் பொது விடுமுறை தினமாக கடைப்பிடித்து வருகிறது. வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாள் வேலை என்ற கோரிக்கையை நீண்ட காலமாகவே வைத்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளுக்கு அனைத்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளிக்கலாம் என்று அனைத்து வங்கிகள் சம்மேளனம் அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.

இதையடுத்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வங்கிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கும் முன்மொழிவை கொண்டுவந்துள்ளது. அதற்கான ஒப்புதல் நாடாளுமன்றத்தில் பெறப்பட்டு ஜனவரி 1 முதல் அமலாகும் என்று தெரிகிறது.