தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்க்கும் போது தன் கட்சியின் கொள்கையை கூறியது போல் தெரிகிறது. அதாவது அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஜாதி, மத ஆதிக்கம் உட்பட மூட பழக்கவழக்கங்களால் விலங்கிடப்பட்டு கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத்தனத்தை ஒழித்தவர். பொதுமக்களை பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூணடியவர்.

சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவு பகலவன், தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் பிறந்த நாளில் அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண் கல்வி, பெண்களின் பாதுகாப்பு. சமத்துவம், சமூகநீதி, சம உரிமை பாதையில் பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விக்கிரவாண்டியில் வருகிற 23ஆம் தேதி முதல் மாநாடு நடைபெறும் நிலையில் அன்றைய தினம் கொள்கைகளை வெளியிடுவார் என்று விஜய் அறிவித்த நிலையில் தற்போது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். நேற்று அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டும் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இன்று தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.