தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியான பாஜக முன்னாள் மாவட்ட துணைத்தலைவி அஞ்சலை பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தலைமறைவாக உள்ள அஞ்சலை ஆந்திராவிற்கு தப்பி சென்றாரா என்று கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் கொலை வழக்கு தொடர்பாக தற்போது பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.