
அர்ஜுன் தாஸ் கைதி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இப்போது வசந்த பாலன் இயக்கத்தில் அநீதி, அங்கமாலி டைரீஸ் பட ஹிந்தி ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் பெண் ஒருவரின் தோளில் சாய்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, மதிய உணவுக்கு பின் குட்டித் தூக்கம்.
இதனிடையில் மாளவிகா மகிழ்ச்சியாகயில்லை என நன்றாக தெரிகிறது. நாம் இது போல பல புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். படம் எடுத்தது தன் அம்மா என குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை இவரை தான் அர்ஜுன் தாஸ் காதலிக்கிறாரா என அவரது பெண் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இதற்கிடையில் ஒரு சில பேர் ”அது அவரது சகோதரி. ஆகவே கவலைப்படத் தேவையில்லை” என கமெண்ட் செய்து வருகின்றனர்.