பொதுவாகவே தினம்தோறும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தலை சீவுவதும் ஒரு வேலை தான். இதனை முறையாக செய்பவர்களுக்கு தலைமுடி தொடர்பான எந்த ஒரு பிரச்சனைகளும் வராது. சிலர் தலைமுடி உதிர்வு அதிகமாக ஏற்படுவதால் தலைமுடியை சீவும் போது பயம் கொள்வார்கள். ஆனால் தினமும் தலைமுடியை சீவுவது தலைக்கு மட்டுமல்ல சில அறிவியல் நன்மைகளும் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஒருவர் காலை ஒரு முறை இரவு தூங்கும் முன்பு ஒரு முறை என்று சராசரியாக தினம்தோறும் இரண்டு முறை தலைமுடியை சீவ வேண்டும். மேலும் தலைமுடியை சீவி பின்னல் போடுவதால் ஏராளமான நன்மைகள் உள்ளன.

அதன்படி நீண்ட கூந்தல் கொண்ட பெண்கள் ஒரு நாளைக்கு மூன்று தடவை சரி தடை செய்யலாம். இதனால் தலைமுடியில் இருக்கும் சிக்கல் குறைந்து முடி பளபளப்பாக இருக்கும். தலைமுடியை ஜடை போடுவதால் மேலும் சிக்கல்கள் முடியில் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும். பெண்களின் தலைமுடியில் இயற்கையாக ஈரழிப்பு மற்றும் பசை தன்மை இருக்கும். கூந்தலை கட்டாமல் அப்படியே விடுவதால் இதில் இருக்கும் ஈரப்பதம் காய்ந்து போய்விடும். தலைமுடியை அவிழ்த்து விடுவதால் சூரிய ஒளி, காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுக்களால் முடிக்கு அதிக பாதிப்பு ஏற்படக்கூடும்.

இதனால் முடி வெடிப்பு, உதிர்வு மற்றும் வளர்ச்சித் தன்மையை ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். பெரும்பாலும் தலைமுடியை அவிழ்த்து விடுவதால் முடியில் வெடிப்புகள் ஏற்படும். சுருள் முடி கொண்டவர்கள் கூந்தலை பின்னிக் கொள்வதால் தலைமுடி வறட்சி அடையாமல் ஆரோக்கியமாக இருக்கும். காலையில் எழுந்ததும் எண்ணெய் வைத்து ஜடை போடுவதால் பழைய முடி, இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராக்டின் மிச்சங்கள், அழுக்கு ஆகியவை அகற்றப்படும். பின்னல் போட்டு தலை முடியை அலைபாய விடாமல் கட்டுக்குள் வைப்பதால் அடர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் காட்சி அளிக்கும்.