தமிழ் சினிமாவில் 90களில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பெண்கள் புகைபிடிப்பதை ஒரு முன்னேற்றமாகவே பார்ப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ள நிலையில் இது பரபரப்பை கிளப்பி உள்ளது. சினிமாவில் பெண்கள் புகைபிடிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ள இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வனிதா புகை பிடிப்பது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது வனிதா நடிகர்கள் படங்களில் புகைபிடிப்பதை வரவேற்கிறீர்கள் ஆனால் அதே நடிகைகள் செய்தால் சர்ச்சையாக்குகிறீர்கள் என்று கூறியுள்ளார்.