
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெற அரசு சார்பில் பல கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றன.
அதன்படி பெண்களின் சுய வேலைவாய்ப்பு இலக்காகக் கொண்டு மஹிளா நிதி திட்டம் என்ற பெயரில் மத்திய அரசால் SIDBI (small industrial development Bank of India) மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொழில் செய்ய விரும்பும் பெண்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்த தொகையை 10 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும். இது பற்றி கூடுதல் விவரங்கள் அறிய உள்ளூர் வங்கிகளை தொடர்பு கொள்ளலாம்.