இன்றைய காலத்தில் இளைஞர்கள் இடையே ரீல்ஸ் மமோகம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பெரும்பாலும் செல்போன் பயன்படுத்தும் நிலையில் ரீல்ஸ் எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ரீல்ஸ் முகத்தால் வாலிபர்கள் சில சமயங்களில் விபரீத செல்களில் ஈடுபட்டு உயிரை இழக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. குறிப்பாக தண்டவாளத்தின் முன்பாக, மலை உச்சியில் நின்று என்று விபரீதமாக ரீல்ஸ் எடுத்து ஒரு லைக்குகாக உயிரை பனையம் வைக்கிறார்கள். இதனால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்கள் குறித்த செய்திகளும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஹரியானா  மாநிலத்தில் ரீல்ஸ் மோகத்தால் வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஹரியானாவில் உள்ள பானிபட் பகுதியில் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு ஒரு வாலிபர் பெண்கள் உடை அணிந்து அதாவது வெறும் உள்ளாடையுடன் நடனமாடியுள்ளார். இது அங்கிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது. மேலும் இதனால் அங்கிருந்த வியாபாரிகள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.