
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது நேற்று நள்ளிரவில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலின் போது மூன்று பயங்கரவாத அமைப்புகள் குறிவைத்து தாக்கப்பட்டதோடு 9 இடங்களிலும் தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் மட்டுமே அழிக்கப்பட்டதாகவும் மக்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் இந்திய ராணுவம் கூறியிருந்த நிலையில் பாகிஸ்தான் அரசு இந்தியாவின் தாக்குதலால் அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த தாக்குதல் பற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் பேசியுள்ளார். அதாவது இந்த தாக்குதலுக்கு கண்டிப்பாக இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் முழு உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. எதிரியை எப்படி சமாளிப்பது என்பது பாகிஸ்தானுக்கும் எங்கள் படைகளுக்கும் நன்றாக தெரியும். தன்னுடைய தீங்கிழக்கும் நோக்கங்களில் எதிரி செயல்படுவதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.