மத்திய மாநில அரசுகள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பெண்களுக்கான பல திட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் பெண்களை கோடிஸ்வரியாக்கும் ஒரு சிறப்பு திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வட்டி இல்லாமல் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் பெயர்   லக்பதி திதி திட்டம். உத்தரகாண்ட் மாநில அரசால் பெண்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்குள் 1.2 லட்சம் பெண்கள் கோடீஸ்வரிகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் பயன்பெறுவதற்கு அந்த பெண் மாநிலத்தின் நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். பெண்களை சுய உதவி குழுக்களுடன் இணைக்க வேண்டும். பெண்களின் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லாமல் தங்களுடைய தொழிலை மேம்படுத்த, பெண்கள் தங்கள் தொழிலை எளிதாக விரிவுபடுத்தும் விதமாக ஐந்து லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.