இந்தியாவில் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு மத்திய அரசு ஒரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அதாவது உத்யோகினி என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

ஆண்டு வருமானம் 1.50 இலட்சத்திற்கும் குறைவாக உள்ள 18 முதல் 55 வயதிற்கு உட்பட்ட பெண்கள் இதற்கு தகுதியுடையவர்கள். கடன் பெற விரும்புவோர் ரேஷன், ஆதார், வருமானம், ஜாதி சான்றிதழ்கள், வங்கி பாஸ் புத்தகம் மற்றும் புகைப்படங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள வங்கிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.