பெண்களுக்கு உதவும் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் புது திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, மத்தியபிரதேசத்தில் லட்லி பஹ்னா யோஜனா எனும் புது திட்டம் அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்தது. இதன் வாயிலாக மாதம் 2,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பெண்களுக்கு மொபைல் எண்ணுக்கு பணம் கணக்கில் செலுத்தப்பட்டதாக அறிவிப்புகள் வந்தது. எனினும் பணம் செலுத்தப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் லட்லி பஹ்னா யோஜனா நேரடி வங்கி பரிமாற்றங்களுடன்(DBT) இணைக்கப்பட்டு இருப்பதால், கணினி வாயிலாக தானாக செய்திகள் அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இது தொழில்நுட்ப கோளாறா (அ) ஊழல் நடக்கிறதா என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.