நாடு முழுவதும் நடப்பு ஆண்டு தட்பவெப்ப நிலை அதிகபட்ச ஏற்ற இறக்கங்களை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மக்களின் அன்றாட பணிகள் அனைத்தும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாநிலங்கள் அங்கு நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பள்ளிகள் திறப்பை மாற்றியமைத்து வருகிறது. அதனபடி, இப்போது பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பானது கோடை விடுமுறைக்கு பின்பாகவும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒருவார காலத்திற்குள் கன மழை காரணமாக சில மாவட்டங்களில் ஜூன் 19 மற்றும் 20 போன்ற தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உத்தரபிரதேசத்தில் நிலவி வரும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக பள்ளிகள் ஜூன் 26-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேசத்தில் ஜூன் 20-ம் தேதி முதல் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் எனவும்  1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் வெப்ப சலனம் காரணமாக மாணவர்களுக்கு ஜூன் 26ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதவிர ஜார்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பானது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.