
இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு உதவும் விதமாக மகிலா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து பயன் பெற முடியும். இதில் அதிகபட்சமாக 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம் எனவும் முதலீட்டு தொகைக்கு 7.5% வட்டி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதே சமயம் இந்த திட்டத்தில் முதிர்வு காலங்கள் இரண்டு ஆண்டுகள் ஆகும். இதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் செலுத்தி திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தின் நன்மை என்னவென்றால் இதில் முதலீடு தொகையை குறுகிய காலத்தில் எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீடு திட்டத்தில் சேர விரும்பும் பெண்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக அமையும்.