
பத்மஸ்ரீ விருது வென்ற சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான கேவி ரபியா தற்போது காலமானார். புகழ்பெற்ற எழுத்தாளர் ஆன இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. அதன் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு கேரள அரசின் வனிதா ரத்தினம் விருதையும் பெற்றுள்ளார்.
இவருக்கு 59 வயது ஆகும் நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது உயிரிழந்தார். மேலும் லட்சக்கணக்கான கிராமப்புற பெண்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றிய ரபியாவின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.