பெங்களூரு நகரின் காமராஜ் வேட்டை பகுதியில் ஷ்ரவ்யா(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த இளம் பெண் தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி ஷ்ரவ்யா தூங்கும் போது பெட்ஷீட் கேட்டு தனது அக்காவுடன் சண்டை போட்டுள்ளார். அதன் பிறகு மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் இளம்பெண் அறையை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.