உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவை சேர்ந்த ஒருவருக்கு தபாலில் பாஸ்போர்ட் வந்தது. அதனை கொடுப்பதற்கு தபால்காரர் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நம்பருக்கும் தபால் காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்து விட்டார்.
இது தொடர்பான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தபால்காரர் ஒவ்வொரு தபால் கொடுப்பதற்கு 100 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக அந்த பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
A kalesh occurred b/w a postman and a person when the postman tore the main page of the passport because the person refused to pay a ₹500 bribe, Lucknow UP
pic.twitter.com/JiDjwCngjK— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 19, 2024
