இந்தியத் திருமணங்கள் என்றாலே அங்கு அரங்கேறும் புதுமையான விஷயங்களுக்குக் குறைவிருக்காது. அந்த வகையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு திருமண விழாவில், விருந்தினர்களுக்கு குளிர்பானம் வழங்குவதற்காக ‘பெட்ரோல் பங்க்’ இயந்திரம் போன்ற ஒரு பிரத்யேக அமைப்பு வைக்கப்பட்டிருந்தது.

மேலும் பெட்ரோல் போடும் அதே பாணியில், ஒரு நபர் அந்த இயந்திரத்தின் குழாயைப் பயன்படுத்தி தனது கண்ணாடித் தம்ளரில் பானத்தை நிரப்பிக் கொள்ளும் காட்சி  என்ற வாசகத்துடன் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வினோதமான மற்றும் ஆக்கபூர்வமான யோசனை நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Ajay Upadhyay (@ajayupadhyay5837)

“>

இந்நிலையில் வழக்கமான முறையில் பானங்களை வழங்குவதற்குப் பதிலாக, இதுபோன்ற வித்தியாசமான முறைகளைக் கையாள்வது திருமண விழாவை மேலும் கலகலப்பாக்குவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொழில்நுட்பத்தையும் கற்பனைத் திறனையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த ‘பெட்ரோல் பங்க்’ பான நிலையம், இந்தியர்களின் புத்திசாலித்தனத்திற்கும் கொண்டாட்ட மனநிலைக்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.