பிரபல நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் (வயது 84) என்பவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவின் ஹோசகேரே கிராமத்தில் வசித்து வரும் சத்யநாராயணாவுக்கு காலையில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பெங்களூருக்கு விரைந்துள்ளார்.

பெங்களூருக்கு விரைந்த ரஜினிகாந்த், தனது மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டை நேராக எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனையில் அனுமதித்தார். ரஜினிகாந்தின் சகோதரர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனது அண்ணனின் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் மருத்துவ நிர்வாகத்திடம் விசாரித்து வருகிறார்.
