பூத் சிலிப் மட்டுமே இருந்தால் வாக்களிக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று அதிமுக தரப்பு மனு அளித்துள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலுக்காக திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், அதிமுக, தேமுதிகள், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இதனிடையே தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பூத் சிலிப் மட்டுமே இருந்தால் வாக்களிக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று அதிமுக தரப்பு மனு அளித்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் பூத் சிலிப்புடன் வாக்காளர் அட்டை அல்லது ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.