தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியை அடுத்து அமைந்திருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் வழக்கம்போல் பூசாரி இரவு பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் அவ்வழியாக சென்றவர்கள் கோயிலின் கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சடைந்து பூசாரிக்கும் ஊர் தலைவர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி உண்டியல் குத்துவிளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்கள் போன்றவை காணாமல் போனது தெரியவந்தது. கோவில் நிர்வாகத்தினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது சட்டை அணியாத நபர் ஒருவர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே வந்து திருடியது பதிவாகி இருந்தது.

இதனை அடுத்து கரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் திருட்டு நடந்தது தங்கள் எல்லைக்குட்பட்டதில்லை என்றும் பாலக்கோடு காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்றும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கூறியுள்ளனர் இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் பாலக்கோடு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.