திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் கோட்டைமேட்டு தெருவில் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சில வருடங்களாக வழிபாடு எதுவும் நடக்காமல் பூட்டியே கிடந்தது. இந்நிலையில் பாம்பு ஒன்று கோவிலுக்குள் செல்வதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, அந்தப் பாம்பு 500 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கத்தை சுற்றி படுத்திருந்தது.

இதை ஆச்சரியமாக பார்த்தவர்கள் அந்த பாம்பிற்கு பால் வைத்து வணங்கினர். இது குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.