அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது நடிகர் விஜயின் முதல் மாநாடு பற்றி பேசினார். அப்போது விஜயின் முதல் மாநாடு மிக பிரம்மாண்டமாக சங்கர் போன்று அமைந்ததாக கருத்து தெரிவித்தார். அதோடு‌ மக்களுக்கு சொல்ல வந்த கருத்துகளை மிகத் தெளிவாக விஜய் கூறியுள்ளதாகவும் கூறினார். விஜய் தற்போது மக்களுக்கு புரியும் வகையில் தெளிவாக பேசி உள்ளார். கமல்ஹாசன் கட்சி தொடங்கிய போது எந்த மொழியில் பேசினார் என்பதை புரியவில்லை. ஆனால் விஜய் அப்படி கிடையாது தற்போது மக்களுக்கு புரியும் வகையில் மிகத் தெளிவாக பேசியுள்ளார். திமுக ஆட்சியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஒவ்வொருத்தரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி திமுகவுக்கு எதிராக பேசும் நிலையில் அவர் சொன்னதைத்தான் தற்போது விஜயும் பேசியுள்ளார். அதிமுகவின் வேலையை விஜய் செய்கிறார் என்று சொல்லாதீர்கள். அதிமுக செய்ற வேலையைத்தான் விஜய் செய்கிறார். அதிமுகவின் இடத்தை விஜய் எடுத்துக் கொள்ளவில்லை. யாருடைய இடத்தையும் யாரும் எடுக்க முடியாது என்றார். மேலும் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய போது தெளிவாக பேசவில்லை எனவும் விஜய் மிகத் தெளிவாக சொல்ல வந்த கருத்துக்களை சொல்லியுள்ளார் எனவும் செல்லூர் ராஜூ கூறியுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது.