
மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவது குறித்து அண்ணாமலை இவ்வாறு பேசினார். டெல்லியில் மெட்ரோ வேண்டும் என மோடி கேட்கிறார். மெட்ரோ காக ஆயிரம் கணக்கான கோடி ரூபாய் இங்கிருக்க கூடிய மத்திய அரசு முதலீடு செய்ய வலியுறுத்தி அரவிந்த் கெஜ்ரிவால் பணம் கொடுங்க என அவரும் மெட்ரோ-காக கேட்கிறார். தமிழகத்தில் பார்த்தால் ஸ்டாலின் அவர்கள் மெட்ரோ விற்கு பணம் கொடுங்க என கேட்கிறார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மெட்ரோவிற்காக மத்திய அரசு செலவிடுகிறார்கள். காரணம் மக்கள் வேகமாக செல்ல வேண்டும், சுற்றுச்சூழல் பாதிப்பை விளைவிக்கும் போக்குவரத்தை கட்டுப்படுத்த தான்.
மெட்ரோ – விற்காக பணம் கேட்கக்கூடிய அரசியல் கட்சிகள் மற்றொருபுறம் இலவச பேருந்து கொடுக்கிறோம். பெண்களுக்கான இலவச பேருந்துகளை அதிகப்படுத்துவோம் என ஈடுபடுவது நியாயமா ? என கேள்வி எழுப்பியுள்ளார். இதே அரசியல் கட்சிகள் மெட்ரோ வழித்தடத்தை அதிகப்படுத்துங்கள் மெட்ரோக்கு நிதி பணம் கொடுங்கள் என கேட்கிறார்கள். இலவச பேருந்து க்கு நாங்கள் எதிராக பேசவில்லை. ஆனால் இவர்களே அதிகப்படியான பேருந்துகளை இயக்குகிறார்கள் இது மெட்ரோ திட்டத்திற்கு எதிர்மறையான செயலாக இருக்கிறது. சொல்வது ஒன்று செயல் வேறு என்பது போல் இவர்களது நடவடிக்கை இருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.