
வங்க கடலில் உருவான புயலால் சென்னை பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரவு பகலாக பெய்த தொடர் கனமழை காரணமாக மழை நீர் வீட்டுக்குள் புகுந்து மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்ட பொது விடுமுறை அறிவித்த நிலையில் தற்போது வரை ஒரு சில இட ங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.
அதே சமயம் மீட்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மழை மற்றும் பெயர்காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.