
தமிழகத்தில் புத்தாண்டு தினத்தின் போது பைக் ரேஸ் மற்றும் வீலிங் போன்றவைகளில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். ஆனால் அதனை மீறியும் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ் மற்றும் வீலிங் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்காணிக்கும் விதமாக நேற்று சென்னையில் மட்டும் 425 இடங்களில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பைக் ரேசில் ஈடுபட்டதற்காக 242 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அதன்படி மது போதையில் வாகனங்கள் ஓட்டியவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்களிடமிருந்தும் இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததாக கூறியுள்ளனர்.