Whatsapp செயலியை உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வயர் இல்லாமல் வாட்ஸ் அப்பில் 2 ஜிபி வரை கோப்புகளை பகிரும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. ஆண்ட்ராய்டில் உள்ள near by share போன்று share files என்ற ஆப்ஷனை பயன்படுத்தி ஃபைல்ஸ் ஷேர் செய்து கொள்ளலாம். பயனரின் மொபைலை அசைப்பதன் மூலம் மற்றவரின் ஷேர் request ஐ காண முடியும்.