திரைத்துறையில் படங்கள் நடிப்பதை தாண்டி பிரபலங்கள் பலரும் சொந்த தொழில் செய்து வருகின்றனர். அதாவது, தளபதி விஜய் மண்டபங்கள், அஜித் பைக் டூர், ரஜினிகாந்த் மண்டபங்கள் என பிரபலங்களின் தொழில் பற்றி கூறிக்கொண்டே போகலாம். அதேபோல்  நாயகிகளில் நயன்தாரா அழகு சார்ந்த தொழில், சமந்தா உடை, காஜல் அகர்வால் நகை என தொழில் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனும் இணைந்துள்ளார்.

படங்கள் இயக்குவது, பாடல்கள் எழுதுவது, தயாரிப்பது என தன் திறமையை ஒவ்வொரு விஷயத்திலும் வெளிக்காட்டி வரும் விக்னேஷ் சிவன் தற்போது நயன்தாராவுடன் இணைந்து கேரளாவில் ஒரு பிஸினஸ் செய்ய இருக்கிறாராம். அதாவது அங்கே பல மாடி Apartment கட்டி விற்க முடிவு செய்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.