செல்லப்பிராணிகள், குறிப்பாக நாய் வளர்ப்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு புதிய தயாரிப்பு சந்தைக்கு வந்துள்ளது. மனிதர்களைப் போலவே இனி நாய்களும் பார்ட்டிகளில் கலந்துகொண்டு கொண்டாடும் வகையில், உலகிலேயே முதன்முறையாக நாய்களுக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட “டாக் பீர்” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் மிக முக்கியமான எச்சரிக்கை என்னவென்றால், இந்த பீர் மனிதர்களுக்கானது அல்ல. மனிதர்கள் யாராவது தவறுதலாக இதன்  குடித்தால் கூட, அவர்களின் உயிருக்கே அது பேராபத்தாக முடியலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த விசித்திரமான பீர், நாய்களுக்கு லேசான மகிழ்ச்சியையும், ஒருவித நிம்மதியான உணர்வையும் பாதுகாப்பான முறையில் வழங்குகிறது. தற்போது குருகிராம், மும்பையின் பந்த்ரா, டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற  பகுதிகளில் இந்த “நாய் பீர் பார்ட்டி” கலாச்சாரம் மிக வேகமாகப் பரவி வருகிறது. நாய் உரிமையாளர்கள் தங்களது செல்லப் பிராணிகளுக்கு இந்த பீரை வழங்கி கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Hello Tau (@hello_tau_)

நாய்களுக்காகத் தயாரிக்கப்பட்ட இந்த பீர் முற்றிலும் ஆல்கஹால்  இல்லாதது ஆகும். நாய்களின் சுவை மற்றும் உடலமைப்பிற்கு ஏற்ப இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சேர்க்கப்பட்டுள்ள லேசான இயற்கை மூலப்பொருட்கள் நாய்களுக்கு மகிழ்ச்சியான உணர்வைத் தருகின்றன. இதில் எந்தவிதமான தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களும் இல்லை என்றும், நாய்களுக்கு உகந்த வைட்டமின்கள் மற்றும் மூலிகைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. இந்த பீரின் பாட்டில்களில் “நாய்களுக்கு மட்டும்” என்று அச்சிடப்பட்டுள்ளது. நாய்களுக்குப் பிடித்த சிக்கன், பீஃப் மற்றும் பேக்கன் போன்ற சுவைகளில், ஒரு பாட்டில் ரூ.300 முதல் ரூ.800 வரையிலான விலையில் இது விற்கப்படுகிறது.

மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் நாய்களின் பிறந்தநாள் மற்றும் தத்தெடுக்கப்பட்ட தினக் கொண்டாட்டங்களில் இந்த பீர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பீர் குடித்தவுடன் நாய்கள் வாலை ஆட்டிக்கொண்டு மிகவும் சுறுசுறுப்பாக மாறுவதாக நாய் வளர்ப்பவர்கள் கூறுகின்றனர். கால்நடை மருத்துவர்கள், இந்த பீரை அளவோடு கொடுப்பது பாதுகாப்பானது என்றாலும், அதிக அளவில் கொடுப்பது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கின்றனர். “PawBrew” என்ற நிறுவனம் இந்த பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் செல்லப்பிராணிகளுக்கான சந்தை 2026-ஆம் ஆண்டிற்குள் 5,000 கோடி ரூபாயைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது செல்லப் பிராணிகளை குடும்ப உறுப்பினராகக் கருதி, இதுபோன்ற சொகுசுப் பொருட்களுக்கு தாராளமாகச் செலவு செய்யத் தயாராகிவிட்டதையே இது காட்டுகிறது.