தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ள நிலையில் அதற்காக விண்ணப்பங்கள் ஜூலை 20-ம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஆயிரம் ரூபாய் விண்ணப்பத்தை வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு ரேஷன் கார்டு மற்றும் வங்கி கணக்கு எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்பத் தலைவிகள் பலரும் பழைய ரேஷன் கார்டில் இருக்கும் பெயர்களை நீக்கம் செய்து புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆயிரம் உரிமைதொகைக்கான விண்ணப்பங்களை முழுமையாக பெரும் வரைக்கும் புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பத்தை பெற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் சார்பாக உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பதற்கான காரணம் ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது.