தமிழக அரசானது கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர்க்கு ஆயிரம் உரிமை தொகையை வழங்கியது. அதன்  பின்னர் இந்த இந்த மாதத்திற்கான பணமும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது. மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் 24ஆம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இதுவரை 10 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாவட்டம் தோறும் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகிய பணிகள் தொடங்கிவிட்டது. புதிய குடும்ப அட்டை வழங்குவது குறித்து விரைவில் அரசு அறிவிப்பை வெளியிடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.