வருகின்ற மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுக புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை ஆம் ஆத்மி மற்றும் ஐக்கிய ஜனதா தள உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணித்துள்ளன. குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காததால் மற்றும் ஹிந்தி தேசியவாத வீடி.சவர்க்கரின் பிறந்ததினமான மே 28ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் காரணங்களால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுகவும் அதிகாரப்பூர்வமாக புறக்கணித்துள்ளது.