தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் நன்மை தரும் திட்டங்களை தாமதமின்றி செயல்படுத்த அதிகாரிகள் முழு மனதுடன் செயல்பட வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் மூத்த அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் இடம் பெற்றுள்ள திஷா குழுவின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நடப்பு நிதியாண்டில் புதிதாக பத்தாயிரம் மகளிர் சுய உதவி குழுக்களை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு சுழல் நிதியாக வழங்க 15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பண்ணை வாழ்வாதார நடவடிக்கை பணிகளுக்காக 60 கோடியும் பண்ணை சாராத பணிகளுக்காக 18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.