Whatsapp நிறுவனமானது அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை தன்னுடைய பயனர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்த அம்சங்கள் அனைத்துமே முன்னதாக சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு அனைத்து பயனாளர்களுக்குமே இது கிடைக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் தான் Whatsappல் அவதார் அறிமுகம் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவதார்களுக்கான ரியாக்சன்களை  சோதனை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டு பதிப்பு 2.23.18.9க்கான வாட்ஸ்அப் பயனர்களுக்கு   சோதனை முறையில் இந்த அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எமோஜி விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலமாக இந்த அவதாருக்கான ரியாக்ஷன்களை பெறலாம்.